சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. வீடு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்ததாகவும், அதேபோல் ரஜினி வீட்டின் வாசலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் செயலி மூலம் ரஜினிகாந்த் ஆடியோவை பதிவு செய்துள்ளார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments