பிக்பாஸ் நடிகையான ரம்யா பாண்டியன், தமிழ் திரையுலகில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக மாறி வருகிறார். ஒரு குறும்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நுழைந்த அவர், ‘கூந்தலும் மீசையும்’, ‘டம்மி டப்பாசு’ ஆகிய படங்களில் நடித்தார்.
பின்னர் ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். இதையடுத்து மொட்டை மாடியில் இடுப்பு தெரியுமாறு புடவையில் ரம்யா வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று இணையத்தைக் கலக்கியது.
இதை வைத்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக நுழைந்தார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பை பெற்ற ரம்யா, போட்டி முடியும்போது ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார்.
இருந்தப்போதிலும் தனிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பிரபல காமெடி நடிகரான சூரியுடன் சண்டை போடுவது போன்று காட்சிகள் உள்ளது. விளையாட்டுக்காக எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.