ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து மொட்டை மாடியில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் இவரது பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது என்றே கூறலாம். இதனால் என்னவோ, இவருக்கு தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இன்னும் பிரபலமானார்.
இதன் காரணமாகவே இவருக்கு பிக் பாஸ் 4-வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் இவருக்கு ரமே ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும், நன்றாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், வழக்கம் போல் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் சிவப்பு நிற உடை அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.