Malayagam
Home » குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்

குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்

பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்இருப்பது குறித்து தெரிய வந்த விஷயம், மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி, பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயற்றில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். இதனை கவனித்ததும் பரபரப்பான மருத்துவர்கள், உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

மேலும் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன சமயத்தில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வயற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இந்த நிலையில், அதனை பரிசோதித்து பார்த்த போது மருத்துவர்கள் கடும் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். குழந்தையின் வயற்றில் இருந்த கட்டிக்குள் 8 கருக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவை ஒவ்வொன்றும் 3 முதல் 5 செ. மீ வரை இருந்ததும் அறிய வந்தது. மிகவும் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை இருந்து விட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்

பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு உருவாகி இருப்பதே நம்ப முடியாத ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், அதற்குள் எட்டு கருக்கள் இருந்தது மருத்துவ உலகில் மிகப்பெரிய அரிதான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் இது போன்ற அரிய நிகழ்வு நடக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

அதே வேளையில் ஒரு குழந்தையின் உடலுக்குள் ஒரு கரு தான் இதுவரை இருந்தது என்பது அதிகம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 கருக்கள் ஒரே குழந்தையின் வயிற்றில் இருந்தது இது தான் முதல் முறை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed