தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.
தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிதந்திருப்பார்.ஐயா சாமி பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் உலக அளவில் பேசப்பட்டது, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.
குறிப்பாக தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இதனிடையே தற்போது தளபதி விஜயின் 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் வாங்காவின் ‘அனிமல்’ போன்ற பெரிய பாலிவுட் திரைப்படங்களை தனது கையில் வைத்துள்ளார்.
அடுத்ததாக புஷ்பா 2 படத்திலும் நடிக்க உள்ளார், இந்நிலையில் அவரின் அடுத்த படம் குறித்து மாஸான தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார், ராஸ்மிகா.
தெலுங்கில் சர்க்காரு வாரி பாடா படத்தின் இயக்குனர் பரசுராம் தனது அடுத்த திட்டத்திற்காக நாக சைதன்யாவுடன் இணைய திட்டமிட்டுள்ளார், மேலும் இந்த திட்டம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
நாக சைதன்யா நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை பரிசீலித்து வருகின்றனர். ராஷ்மிகா உண்மையில் படத்தில் நடிக்கிறார் என்றால், அவர் திரையில் சைதன்யாவுடன் காதல் செய்வது இதுவே முதல் முறை ஆகும் .
ஆனால் இது ஒரு யூகம் மட்டுமே மற்றும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இல்லை. மேலும் விவரங்கள் உரிய நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.