தெலுங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா திரைப்படம் இந்த வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்ரீவள்ளியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் லுக் வெளியாகியுள்ளது.
அமர்ந்துகொண்டு முகக் கண்ணாடியைப் பார்த்து காதணி மாட்டுவதாக ராஷ்மிகாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களையே வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக, இந்திய அளவில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பாவின் முதல் பார்வையான ‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று அறிவித்தனர்.
இதனையடுத்து புஷ்பா மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா குறுக்கே வந்ததால் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் முதல் பாகத்திற்கான அப்டேட்டை அள்ளித்தூவி வருகிறது படக்குழு. அதன்படி வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் அன்று புஷ்பா முதல் பாகம் திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.