Thu, Jan28, 2021
Home உறவுகள் பெண்களுக்கு ஒருதலை காதல் அதிக ஆபத்தை தரும்

பெண்களுக்கு ஒருதலை காதல் அதிக ஆபத்தை தரும்

ஒருதலை காதலுக்காக சிலர் படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை. காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதியாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும்.

அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். ஒரு பெண் தனது காதலை ஏற்றுக்கொள்ளாதபோது, அதை ஆண் அமைதியாக ஏற்றுக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும்.

மாறாக அவள் தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள் என்று கருதும்போதுதான் அது வன்ம உணர்வை தூண்டுகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஒருதலை காதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கத்தான் செய்கின்றன.

பெண்கள் எப்போதும் புதிதாக ஒருவர் தன்னிடம் பேசும்போதும், பழகும்போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்.

நட்பாக மட்டுமே இருந்தால் ஆபத்தில்லை. வேறு மாதிரியான எண்ணங்கள் மனதில் இருப்பதாக தோன்றினால், விழிப்பாகி விடவேண்டும். பெண், ஆணிடம் பழகும்போது அவர் ஒருதலை காதலோடு தன்னை அணுகும் சூழ்நிலை உருவாகலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

அதனால் தொடக்கத்தில் இருந்தே நெருங்காமலும், விலகாமலும் ‘நான் எல்லோரிடமும் இப்படித்தான் நட்போடு பழகுவேன்’ என்பதை சுட்டிக்காட்டிவிடுங்கள்.

ஆபத்து என்றால் உதவுங்கள். உதவிக்கு அவர்கள் நன்றி சொல்வதோடு அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது அவைகளை பற்றி பேசாமலே தவிர்க்கவேண்டியதில்லை.

பெண்கள் சுய நலத்திற்காக இளைஞர்களை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்கள் குடும்ப விஷயங்களிலும், அந்தரங்க விஷயங்களிலும் அவர்களை தலையிட அனுமதிக்கும்போது, நீங்கள் அவரை காதலிப்பதாக அவர் புரிந்துகொள்ளக்கூடும்.

பரிசுகளுக்கும், பண உதவிகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் ஆண்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒரு பெண் தன்னிடம் மனம் விட்டுபேசினாலே அது காதல்தான் என்று ஆண்களும் தப்பாக புரிந்துகொள்ளக்கூடாது.

காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...