பெண்களின் கர்ப்பகாலம் என்பது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சிக்கலான ஒரு காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள்.
கர்ப்ப காலத்தின் போது பெண்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் அதற்காக தூண்டப்படுவதும் இயற்கையான ஒன்றுதான்.
பல பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பற்றது என்று நினைக்கிறார்கள். முதுகுவலி, குமட்டல் போன்ற பல பிரச்சினைகள் இருப்பதால் பெண்கள் செக்ஸ் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் ஈடுபடுவதிலிருந்து பின்வாங்குகிறார்கள்.
இருப்பினும் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது இயல்பானது மற்றும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் உறவில் ஏற்படும்போது எப்படி வலியைக் குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது சிறிது மகிழ்ச்சியான நேரம் தேவை என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் எவ்வளவு அதிகமாக நகர்கிறீர்களோ, அவ்வளவு அசெளகரியமும் உங்களுக்கு ஏற்படக்கூடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மிஷனரி அல்லது ஸ்பூனிங் போன்ற ஒரு வசதியான செக்ஸ் நிலைக்கு மாற்றிக்கொள்வது தேவையற்ற வலியைத் தவிர்க்க மிகவும் பரிந்துரைக்கப்பட்ட நிலைகளாகும். கடினமான பொசிஷன்கள் எதையும் முயற்சிக்காதீர்கள்.
இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பிரபலமான உறவாக இருக்கலாம். காலை நேரங்களில் நீங்கள் குமட்டல் மற்றும் அசௌகரியங்கள் உணர்கிறீர்கள் என்றால் காலை உடலுறவை முயற்சிக்க வேண்டாம்.
நீங்கள் புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணரும்போது நாளின் பின்பகுதியில் உங்கள் உடலுறவை திட்டமிடுவது நல்லது. பிற்பகல் அல்லது மாலை நேரங்கள் உடலுறவிற்கு சிறந்த நேரமாகும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது இன்னும் நிறைய யோனி வெளியேற்றம் நடைபெறலாம் என்பது உங்களுக்குத் தெரியும். அது இன்னும் சங்கடமாக இருக்கும். இது அதிகமாக உங்கள் யோனியைச் சுற்றி வறட்சியை ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருப்பவர்கள் அங்கு வறண்டு போவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. எனவே சில கூடுதல் ஃபோர்ப்ளே உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் நல்லது செய்யக்கூடும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.