தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரெஸ்டாரன்ட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்த பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அந்த பெண்ணை ரெஸ்டாரன்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? என அந்த பெண் கேட்க, புடவை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டவை என ரெஸ்டாரன்ட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் ரெஸ்டாரன்டை நடத்துவதற்கு சரியான உரிமம் பெறவில்லை. அதனால் ரெஸ்டாரன்டை மூடுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். உரிமையாளரும் ரெஸ்டாரன்டை மூடுவதற்கு சம்மதம் தெரிவித்தள்ளார்.
அந்த பகுதி சுகாதார இன்ஸ்பெக்டர் சுகாதார வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரன்ட் இயங்கி வந்ததை கண்டு, அதை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பின்னர், பொது சுகாதார இன்ஸ்பெக்டர் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அதே நிலையில் இயங்கி வந்ததால் நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.