Restaurants to increase food prices by 10% : வியாழன் (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து பேக்கரி பொருட்கள் மற்றும் பிற நுகர்பொருட்களின் விலைகள் 10% அதிகரிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
66% மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று கூறிய அவர், பல ஆண்டுகளாக CEBக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவே இந்த கட்டண உயர்வு முன்மொழியப்பட்டதாக கூறினார்.
உணவகங்களில் விற்கப்படும் ரைஸ், கொத்து மற்றும் இதர நுகர்பொருட்களின் விலையை நள்ளிரவு முதல் 10% உயர்த்தவுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Summary in English: The Restaurant Owners’ Association announced that the prices of all bakery items and other consumables sold at restaurants will be increased by 10% with effect from midnight Today (16).