இந்திய சினிமாவின் மெகா ஸ்டார்களை வைத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் சமீபத்தில் தான் நிறைவு செய்யப்பட்டது.
இதில் நடித்த பல நடிகர், நடிகைகள் இதை சோஷியல் மீடியா பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி, சரத்குமார், பார்த்திபன், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்திலும், இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டின் முடிவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சில நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பொன்னியின் செல்வன் படத்தில் இன்னும் சிறிய அளவிலாக பாகம் மீதமுள்ளதாம்.
இவற்றை படம்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். வரும் டிசம்பரில் இந்த ஷுட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
பிரபல பாடகரும், அசுரன் படத்தில் நடித்த நடிகருமான தீஜாய் அருணாச்சலத்தை வைத்து தான் இந்த மீதமுள்ள காட்சிகளை எடுக்க போகிறார்களாம். இவர் நடிக்க உள்ளது படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளாம். அதே சமயம் இவர் என்ன ரோலில் நடிக்க போகிறார் என தெரியவில்லை.
படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக அறிவித்துவிட்ட பிறகு, ஒரே ஒரு நடிகர் நடிக்கும் பகுதிக்காக மீண்டும் ஷுட்டிங்கை துவக்கி உள்ளாராம் மணிரத்னம்.
இது ஏற்கனவே எடுக்கப்பட வேண்டிய பாகமா அல்லது விட்டுப்போய் மீண்டும் சேர்க்கிறார்களா அல்லது புதியதாக இந்த கேரக்டரை சேர்க்கிறார்களா என தெரியவில்லை.
இதனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிவடைவதற்குள் கதையில் உள்ள அனைத்து கேரக்டர்களும் உள்ளதா என சரி பார்த்து, விட்டு போன பாகங்கள் எடுக்கப்பட்டு படத்துடன் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாக சில நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.