வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் RJ பாலாஜி.
மேலும் தற்போது ஐபிஎல் கமெண்ட்ரியிலும் தற்போது கலக்கி வருகிறார்.
இந்த நிலையில், RJ பாலாஜி தற்போது அவரது மனைவி திவ்யாவின் போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.
கடந்த 2003ல் இருந்து தற்போது வரை 20 வருடங்களாக தொடரும் காதல் பற்றி அவர் நெகிழ்ச்சி உடன் பேசி இருக்கிறார்.