சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார். தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ரசிகர்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடுவார். அப்படித்தான் அவரின் இன்ஸ்டா ரீல் ஒன்று தற்போது ரசிகர்களிடம் பேசுபொருளாகி உள்ளது.
அதில் அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பதை கணிப்பது போல காட்டி இறுதியில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறிவிட்டது.
இதைப்பார்த்து பிரியங்கா மட்டுமில்லை, ரசிகர்களும் ஷாக்காகிவிட்டனர். அதைத்தான் இப்போது பலரும் ஏற்கெனவே ரோஜாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என புரளியை கிளப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.