தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ரோஷ்நி ஹரிப்ரியன் நடித்து வருகிறார் என்பதை விட வாழ்ந்து வருகிறார் என கூறலாம். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விஜய் டிவியின் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியலும் இதுதான். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் சினிமாவில் கிடைத்து வரும் வாய்ப்புகள் காரணமாக பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.
இன்னொரு பக்கம் கதை காலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. எது எப்படியோ அவர் கடந்த 23ஆம் தேதி தான் இந்த சீரியலுக்காக கடைசியாக நடித்து கொடுத்துள்ளார்.
ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ரோஷினிக்கு பாரதிகண்ணம்மா சீரியல் குழு ஒரு சிறிய பார்ட்டி வைத்து வழி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஷினி ஹரிப்ரியன் இன் விலகல் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.