Malayagam
Home » வளர்ப்பு மகனை மணந்து வைரலான பெண்… கர்ப்பமானதாக அறிவிப்பு

வளர்ப்பு மகனை மணந்து வைரலான பெண்… கர்ப்பமானதாக அறிவிப்பு

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது.

மரினா பலம்சேவா (37) என்ற பெண் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டார். இதற்கு காரணம் தனது வளர்ப்பு மகனான விளாடிமிர் ஸ்வ்ரின் (23) என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டது தான்.

மரினாவுக்கு அலெக்சி என்பவருடன் திருமணமான நிலையில் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இதையடுத்து கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது வளர்ப்பு மகன் விளாடிமிரை அவர் மணந்தார்.

விளாடிமிர் – மரினா தம்பதிக்கு ஏற்கனவே 20 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாகியிருக்கிறார். இந்த செய்தியை மரினாவே அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் உங்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மரினா கூறுகையில், விளாடிமிருடன் திருமணமான நேரத்தில் தான் அதிக எடையுடன் இருந்தேன்.

பின்னர் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டதோடு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மரினாவை இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed