Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அந்த நபரை பார்த்தால் உடனே டும்..டும்..டும் தான்.!

சதா

தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை சதா. இவர், தமிழில் “ஜெயம்” திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக அந்நியன், அஜித்திற்கு ஜோடியாக திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சதாவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது.

தமிழில் மட்டுமில்லாமல், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சில முக்கியமான நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், 37 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனையடுத்து திருமண ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய சதா ” நான் தற்போது வரை திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. திருமணம் பற்றிய சிந்தனைகளும் என் மனதில் இல்லை. எனக்கு சரியான பொருத்தமான நபரை நான் இன்னும் பார்க்கவில்லை. ஒருவேளை அந்த நபர் நான் பார்த்தால் உடனடியாக அவரை திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சதா கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியான “டார்ச்லைட்” படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.