Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சனி வக்ர பெயர்ச்சி: மகிழ்ச்சியின் உச்சத்தை தொட உள்ள 6 ராசிகள்

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சி: ஏப்ரல் 29ல் அதிசாரமாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு சென்ற சனி பகவான், தற்போது வக்ர கதியாக மீண்டும் தனது பழைய நிலையான மகரத்திற்கு ஜூலை 12ம் தேதி திரும்ப உள்ளார்.

அதோடு 2022 அக்டோபர் 23ம் தேதி வரை மகர ராசியிலேயே வக்ர நிலையில் இருப்பார். அதன் பின்னர் நேர்கதியாக பயணத்தை தொடங்குவார்.

சனி வக்ர பெயர்ச்சி : ஜோதிடத்தில் கரமகாரகன், நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இவரின் பெயர்ச்சி எப்போதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்… ஆண்களே… இன்னைக்கே வாங்கிடுங்க!

ஏப்ரல் 29ல் அதிசாரமாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு சென்ற சனி பகவான், தற்போது வக்ர கதியாக மீண்டும் தனது பழைய நிலையான மகரத்திற்கு ஜூலை 12ம் தேதி திரும்ப உள்ளார்.

அதோடு 2022 அக்டோபர் 23ம் தேதி வரை மகர ராசியிலேயே வக்ர நிலையில் இருப்பார். அதன் பின்னர் நேர்கதியாக பயணத்தை தொடங்குவார்.

சனி பகவானின் இந்த 100 நாள் வக்ர பெயர்ச்சியாக, மகரத்தில் சஞ்சரிப்பதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும், குறிப்பாக எந்தெந்த ராசியினருக்கு மகிழ்ச்சியும், நற்பலன்களும் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சனி வக்ர பெயர்ச்சி

மேஷம்: பழைய கவலைகள், நோய்கள் நீங்கும்

மேஷ ராசிக்கு சனியின் இந்த வக்ர சஞ்சார நிலை, பல வகையில் நன்மை தருவதாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, இந்த நேரம் அனைவருக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தடைப்பட்ட சில அவசர வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிக்கும் சாதக சுழல் நிகழும்.

உங்களின் ஆரோக்கியம் மேம்படும். பழைய கவலைகள் நீங்கவும், தொந்தரவு கொடுத்து வந்த நோய்கள் நீங்க வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான எந்த ஒரு பிரச்சினையும் நீங்குவதோடு, உங்களுக்கு அதில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த 100 நாட்களில் உங்களின் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சனி வக்ர பெயர்ச்சி

மிதுனம்: பொறுப்பை நிறைவேற்றுவீர்கள்

மிதுன ராசிக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலனைத் தருவதாக இருக்கும். உங்களின் வாழ்க்கையில் புதிய விஷயங்கள், புதுவித மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பணியிடமாக இருந்தாலும், குடும்ப விஷயமாக இருந்தாலும் சரி உங்களின் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

எதையும் யோசிக்காமல் வேலையில் கவனம் செலுத்துவதால் எந்த வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற்றிடுவீர்கள். நீங்கள் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணங்களின் மூலம் நன்மை அடைவீர்கள். உங்கள் சொத்து தொடர்பான அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.

இருப்பினும் இந்த நேரத்தில், உங்களின் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மகிழ்ச்சியின் உச்சத்தை தொட உள்ள 6 ராசிகள்

கடகம் ராசி: பதவி உயர்வுகள் உண்டாகும்

சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ராசிக்கு பதவி உயர்வு, பணியிடத்தில் நற்பெயர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் குறைந்த வருமானம் மற்றும் அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும். வியாபார விஷயங்களில் உங்களுக்கு சுப யோகங்கள் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் வணிகம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் லாபமும் கூடும்.

சனி வக்ர பெயர்ச்சி

​சிம்மம்: வேலை கிடைக்கும்

சிம்ம ராசிக்கு நிதி ரீதியான நல்ல ஆதாயம் அடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்களின் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இருப்பினும் நீங்கள் உங்களின் புத்திசாலித்தனத்தால் அவர்களின் திட்டங்களை சிறப்பாக சமாளித்து வெற்றி பெற வாய்ப்புள்ளது.

நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த வேலை நடக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

​துலாம்: தொலைதூரப் பயணம் செல்ல நேரிடும்

சனியின் இந்த வக்ர சஞ்சார நிலை காரணமாக வாழ்வில் சுப நிகழ்வுகளும், சுப பலன்களும் கிடைக்கும். இந்த காலத்தில் உங்களின் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். வேலை நிமித்தமாக நீங்கள் சில நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணத்தின் நோக்கம் நிறைவேறும்.

தொழில், வியாபாரத்தில் முன்னோக்கி எடுத்துச் செல்ல புதிய திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்துவீர்கள். உங்களின் நிதி நிலைமை மேம்படும்.

குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாய், உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் வரலாம். வயிறு அல்லது தோல் சார்ந்த நோய்கள் தொல்லை தர வாய்ப்புள்ளது என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.