Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயர நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சத்யராஜ் ஹீரோ, வில்லன், குணசித்திர கேரக்டர் என பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் என்பவர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக கல்பனா மன்றாடியார் உடல்நலக் குறைவாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் அவர்களுக்கு வயது 66 என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரை உலக பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.