Malayagam
Home » 2025 ஆம் ஆண்டு வரை இந்த 5 ராசிக்காரங்களுக்கு சனி பகவான் கஷ்டத்தை தருவாராம்… இதுல உங்க ராசி இருக்கா?

2025 ஆம் ஆண்டு வரை இந்த 5 ராசிக்காரங்களுக்கு சனி பகவான் கஷ்டத்தை தருவாராம்… இதுல உங்க ராசி இருக்கா?

5 ராசிக்காரங்களுக்கு சனி கஷ்டத்தை தருவாராம்

Saturn Will Give Problems For These Zodiac Signs Till 2025 : ஜோதிடத்தில் சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர். இந்த சனி நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். பொதுவாக ஏழரை சனி காலத்தில் சனி பகவான் பல வேதனைகளைத் தருவார். சனி இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார்.

இதனால் சனி பகவானால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் யார் என்பதைக் பார்க்கலாம் வாங்க.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கிவிட்டது. எனவே கடக ராசிக்காரர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் இந்த காலத்தில் படிப்பில் சிரமத்தை சந்திப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலும் அலுவலகத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். இருப்பினும் மாணவர்கள் கடினமாக உழைத்தால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கிவிட்டது. இதனால் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சொல்லப்போனால், அதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் ஏற்றத்தாழ்வுகளை காணலாம்.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடைபெறுவதால், 2025 வரை கும்ப ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அது விரிசலை ஏற்படுத்திவிடும்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. இதனால் இனிமேல் மீன ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். பணப்பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தேவையில்லாத செலவுகளை சந்திக்கக்கூடும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். இதனால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாமல் போகும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed