Wed, Sep28, 2022
HomeசினிமாCinema Newsபொன்னியின் செல்வன் இரண்டாவது சிங்கிள் வெளியீடு எப்போ தெரியுமா?

பொன்னியின் செல்வன் இரண்டாவது சிங்கிள் வெளியீடு எப்போ தெரியுமா?

HTML tutorial

முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் டீசர் சில தினங்களின் முன் மிக பிரம்மாண்டமாக வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாகிறது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அப்டேட்க்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் சிங்கிள் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பாடலின் புதிய போஸ்டரை வெளியிட்டன. இசைப்புயல் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

இந்த பாடல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு ஐதராபாத்தில் நடைபெறயுள்ளது.இந்த படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் ஆந்திர செல்வதாகவும் அங்குள்ள நடிகர்கள் இணைந்து விழாவை சிறப்பாக நடத்த உள்ளனர்.

முதல் பாடல் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த பாடலும் வெற்றி பெரும் என்னும் நம்பிக்கையும் பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க