Mon, Dec5, 2022

#Trending

கணவருடன் மோதவுள்ள ஆல்யா… வெளியான முக்கிய தகவல்

சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போது தற்போது சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமான இவர் அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததது.

முதல் பிரசவத்திற்கு பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக நடிகை ரியா நடித்து வருகிறார். தற்போது குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆல்யா மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதனிடையெ தற்போது ஆல்யா மானசா சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரக்கும் புதிய சீரியலில் ஆல்யா மானசா லீடு ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீரியலுக்காக ஆல்யா மானசா ஏற்கனவே கமிட் ஆகிவிடடார் என்றும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஆல்யாவின் கணவர் தற்போது சன்.டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், தற்போது கணவருக்கு போட்டியாக ஆல்யா சன்டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளது இருவருக்கும் இடையே டிஆர்பி ரேட்டிங்கில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities