போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(23) கடந்த 3ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், மிகவும் மன வேதனையுடன் இருக்கும் ஷாருக்கான் குடும்பம் சமீபத்தில் ஆர்யனுடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர்.
மேலும் வீட்டிலிருந்து உணவுகள் கொடுக்க அதிகாரிகள் மறுத்த நிலையில், சிறை சாப்பாட்டை சாப்பிடாமல் அங்கே கடைகளில் தண்ணீர் மற்றும் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கேண்டீனில் செலவழிப்பதற்காக மகன் ஆர்யன் கானுக்கு அவரது தந்தை ஷாருக்கான் ரூ.4 ஆயிரத்து 500 மணிஆர்டர் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சிறை அதிகாரி கூறுகையில், சிறை கைதிகளுக்கு அதிகபட்சம் ரூ.4 ஆயிரத்து 500 மணி ஆர்டர் அனுப்ப விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் ஆர்யன்கானுக்கு அந்த தொகையை ஷாருக்கான் அனுப்பி உள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அவருக்கு அந்த பணம் கிடைத்துள்ள நிலையில், வெளியில் இருந்தும் சாப்பாடு கொடுப்பதற்கு அனுமதியில்லாத நிலையில் ஜெயிலில் தரமான சாப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.
கொரோனா பரவல் காரணமாக கைதிகளை குடும்பத்தினா் யாரும் நேரடியாக பார்க்க முடியாது. விசாரணை கைதிகள் வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் ஆர்யன் கான் தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டார். இதேபோல ஆர்யன் கானுக்கு விசாரணை கைதிகளுக்கான அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.