Save 20% off! Join our newsletter and get 20% off right away!

என்னால் என் குடும்பத்துக்கு நிறைய தொல்லை: நடிகர் ஷாருக்கான் உருக்கம்

ஷாருக்கான்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் அவரின் பங்களாவான மன்னத் முன்பு ரசிகர்கள் கூடினார்கள்.

யாரும் இங்கு கூடக் கூடாது என்று போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பேட்டியில் ஷாருக்கான் தன் குடும்பம் பற்றி பேசியதை பார்ப்போம்.

2017ம் ஆண்டு அளித்த அந்த பேட்டியில் ஷாருக்கான் கூறியதாவது,

கௌரிக்கு 14 வயது இருந்தபோதே அவரை எனக்கு தெரியும். அதனால் தற்போது அவரை 35 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். ஒரு நடிகருடன் சேர்ந்து வாழ்வது கடினம்.

நான் இந்த உலகத்திற்கு சொந்தம். என்னுடன் சேர்ந்து வெளியே சென்றால் என்னை பார்க்க காத்திருப்பவர்களை எதிர்கொள்ள வேண்டும். தேவையில்லாத பல தொல்லைகளை நான் குடும்ப வாழ்க்கையில் கொண்டு வருகிறேன்.

என் குடும்பத்தாரை கிண்டல் செய்கிறார்கள். அவர்களின் பிரைவசி பறிக்கப்படுகிறது. என்னால் சாதாரணமாக வாக்கிங் கூட செல்ல முடியாது.

சில சமயம் என் குடும்பத்தை பற்றி மோசமாக பேசப்படும்போது அதற்கு நான் பொறுப்பாக உணர்கிறேன். வாங்கடே ஸ்டேடியத்தில் நான் ஏதாவது செய்தால் அது நான் செய்தது, என் குழந்தைகள் அல்ல. என் மகள் மற்றும் அவரின் தோழிகளையே என்னால் பாதுகாக்க முடியவில்லை.

எனவே, என்னால் ஏற்படும் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளும் கௌரியை நான் மதிக்கிறேன். கௌரி இல்லாமல் நான் இல்லை என்றார்.

போதை வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யன் வீடு திரும்பிவிட்டார். அதனால் அவர்களின் வீடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.