Malayagam
Home » உல்லாசத்துக்கு தடை: ஸ்கெட்ச் போட்டு கணவனை காலி செய்த மனைவி..!

உல்லாசத்துக்கு தடை: ஸ்கெட்ச் போட்டு கணவனை காலி செய்த மனைவி..!

திண்டுக்கல் மாவட்டம், திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கரூர் மாவட்டம் மன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி தேவி (30). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து திருமணத்திற்கு பின்னர் திருக்கோணத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

காயத்ரி தேவி தன் தாயார் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்த்த உறவினர் கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது மணிகண்டனுக்கு தெரிய வந்ததும், காயத்ரி தேவியை கண்டித்ததோடு மன்மங்கலம் செல்ல தடைவிதித்துள்ளார்.

இதனால், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டதை பொறுக்க முடியாத காயத்ரி தேவி, கணவனை கொல்ல கமலக்கண்ணனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். திட்டமிட்ட படி, மணிகண்டனை மது அருந்த அழைத்துச் சென்ற கமலக்கண்ணன். போதை ஏறியதும் மணிகண்டனை அடித்துக் கொலை செய்திருகிறார். இந்த சம்பவம் 2018 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அரவக்குறிச்சி அருகே நடந்துள்ளது.

மணிகண்டன் உடலை மீட்ட அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன், காயத்ரி தேவி சிக்கியுள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .

வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து காயத்ரி தேவி கமலக்கண்ணன் இருவரின் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூபன் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed