Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தெறி சமந்தாவாக மாறிய ஷிவாங்கி.!

தெறி சமந்தாவாக மாறிய ஷிவாங்கி.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர் 7” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றதன் மூலம் அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில், மிகவும் பிரபலமானார்.

தெறி சமந்தாவாக மாறிய ஷிவாங்கி.!

இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, கோமாளிகளுடன் இணைந்து செய்த குழந்தை தனமான லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இப்போது, சிவாங்கி பல பெரிய ஹீரோ படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியன் டான் படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படப்பிடிப்புகள் இல்லாத தினத்தில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் அரை இறுதி போட்டி என்பதால் கோமாளிகள் ஒவ்வொரு கெட்டப்களை போட்டுள்ளனர்.

தெறி சமந்தாவாக மாறிய ஷிவாங்கி.!

அந்த வகையில் ஷிவாங்கி இந்த வாரம் தெறி படத்தில் சமந்தா போட்டிருந்த கெட்டப்பை ஷிவாங்கி இந்த வாரம் போட்டுள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடா நம்ம ஷிவாங்கி அப்பிடியே சமந்தா மாதிரி இருக்காங்க என தெரிவித்து வருகிறார்க் .