நடிகை ஸ்ருதி ஹாசன்
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக விளங்கும் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் மூலம் பிரபலமானவர்.
இதனை தொடர்ந்து தமிழ் சினமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் ஒரு வலம் வந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் குறைந்த படங்களிலே பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
லிவ் இன் டூ கெதர்
இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவ் இன் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவர்கள் தனியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் உறவு தொடர்பாகவும் அவ்வப்போது பதிவேற்றுவார்.
சமீபக்காலமாக இரகசியமாக வைதிருக்க வேண்டிய விடயங்கள் எல்லாம் ஓபனாக கூறி வருகிறார்.
இந்நிலையில் தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “எல்லாம் எனக்கும் வேண்டும் ” என்று குறிப்பிட்டு புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.