பாலகிருஷ்ணாவின் 107வது படத்தை கோபிசந்த் இயக்குகிறார். தற்போதைக்கு NBK107 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். ஆனால் கோபிசந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படம் NBK107.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி ஸ்ருதி என்பதை அறிந்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
அவர் போதி தர்மர் செட்டுமா, அவருக்கு போய் ஜோடியாக நடிக்க வேண்டாம். நீங்களும், அவரும் டூயட் பாடினால் நன்றாக இருக்காது. அப்பா, மகள் போன்று தெரிவீர்கள்.
இயக்குநரே தயவு செய்து ஸ்ருதிக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கவும் என்று தெரிவித்துள்ளனர்.
பாலகிருஷ்ணாவுக்காக இல்லை மாறாக தனக்கு பிடித்த இயக்குநரான கோபிசந்துக்காக அந்த படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக் கொண்டிருப்பார் என்று பேசப்படுகிறது.
கோபிசந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான கிராக் படத்தின் ஹீரோயின் ஸ்ருதி தான். கோபிசந்த் இயக்கத்தில் ஸ்ருதி நடித்த இரண்டு படங்களுமே ஹிட். அதனால் தான் தனக்கு ராசியான ஹீரோயினை பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.