சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிம்பு தற்போது ’பத்து தல’, ;வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த ’மஹா’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
கெடுத்திட்டியே என்னை கெடுத்திட்டியே
உன் காதலால் என்னை கெடுத்திட்டியே
எடுத்திட்டியே ஐயோ எடுத்திட்டியே’
என்னோட உசுர எடுத்திட்டியே
என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் விவேக் பாடல் வரிகளில் பென்னி தயால் குரலில் உருவாகிய இந்த பாடல் முதல்முறை கேட்கும்போது கவர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜமீல் இயக்கியுள்ளார்.
ஜிப்ரான் இசையில், லட்சுமண் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.