தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டி ராஜேந்தர் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்ததை தொடர்ந்து அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கி பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வரும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது வெற்றியை பதித்தார். இவரது நடிப்பில் அடுத்ததாக விந்து தணிந்தது காடு, 10 தல உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
கிட்டத்தட்ட 40 வயதாகும் சிம்பு தற்போது வரை சிங்கிளாக இருந்து வரும் நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மும்மரமாக பின் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிம்புவுக்கு மயிலாடுதுறையில் ஒரு பெண் பார்த்து இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களை தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் சிம்புவின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.