சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் திருமணம்
சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல பெயரைப் பெற்று தந்திருக்கிறது. தற்போது ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் நடித்த நிதி அகர்வாலுடன் சிம்புவை இணைத்து கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கும் சிம்புவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
தற்போது சிம்புவின் தரப்பில் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுக்கப்பட்டிருக்கிறது.