HomeசினிமாCinema News100 கோடிவசூலித்த டாக்டர்.. கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

100 கோடிவசூலித்த டாக்டர்.. கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. பட ரிலீஸில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்படவே இரவோடு இரவாக ரூ. 25 கோடி கடன் வாங்கி சமாளித்தார் சிவகார்த்திகேயன்.

இப்படி சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் டாக்டர் படம் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

அந்த அறிவிப்பை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், கோபமும் அடைந்திருக்கிறார்கள். ரூ. 100 கோடி வசூல் செய்து வெற்றிநடை போடும் படத்தை போய் தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்புகிறார்களே என்பது தான் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்.

இன்று ட்விட்டரில் சிவகார்த்திகேயன் பேச்சாக தான் உள்ளது. மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் புனீத்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

- Advertisement -

பெங்களூருக்கு வந்தால் என் வீட்டிற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று புனீத் ராஜ்குமார் பலமுறை என்னிடம் கூறினார். ஆனால் அது இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular