Save 20% off! Join our newsletter and get 20% off right away!

முதலில் ஹீரோயின் அடுத்து கதை.?! பாலிவுட்டுக்கு கொக்கி போடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் பெரிய பட்ஜெட் கேற்ப கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது அனுதீப் இயக்கத்தில் தனது 20 வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்த முடித்த பிறகு, கமல் தயாரிப்பில் தனது 21-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சிங்கப்பாதை, மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன், படத்தின் கதையை கேட்பதற்கு முன்பே ஹீரோயினை தேர்வு செய்து கால்ஷீட் வாங்கிவிடுகிறாராம்.

அந்த வகையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில், உருவாகவுள்ள இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் ஹீரோயினான கியாரா அத்வானியை தேர்வு செய்ய சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறதாம்.

இதைபோல், சிங்கப்பாதை படத்திற்கும் சமந்தாவை முன்னதாகவே ரிசர்வ் செய்து கால்ஷீட் வாங்கியதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. சிவகார்த்திகேயன் கதை கேட்கும் முன்பே ஹீரோயின்களைதேர்வு செய்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.