Fri, May7, 2021

அடுத்தடுத்து சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்.!!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் போட்டித்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பல சாதனைகளை படைத்துள்ளார். தனது 148வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர், 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்த சாதனை புரிவதற்கு அவருக்கு 40 ரன்கள்தேவைப்பட்டது. அடுத்த அதிக எண்ணிக்கையில் அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் டெல்லி அணியின் வீரர் ஷிகர் தவன் 43 அரைசதம் அடித்து இரண்டாவது இடத்திலும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 40 வரை அரைசதங்களை அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் டேவிட் வார்னர் அடித்த 2 சிக்சர்கள் அவரது சாதனையை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ஐபிஎல்லில் 200 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்