Fri, May7, 2021

உண்மையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்: ரோகித் சர்மா நெகிழ்ச்சி

கொரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலானோர் அவர்கள் விரும்பியதை செய்ய முடியாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பங்கேற்பு இல்லாமல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

2021 சீசனில் முதல் போட்டி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா நேரத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுவது அதிர்ஷ்டம் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏராளமான மக்கள் கடினமான நிலையில் உள்ளனர். பெரும்பாலான மக்கள் அவர்களது வேலையை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

அவர்கள் விரும்புவதைக் கூட செய்ய முடியவில்லை. குறைந்த பட்சம் நாங்கள் விரும்புவதை செய்ய முடிகிறது என்பதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

குறைந்தபட்சம் நான் கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்