இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குசல் மெண்டீஸ் திருமணம் நடந்துள்ளது.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3022 ரன்களை குவித்துள்ளவர் குசல் மெண்டீஸ்.
இவர் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2167 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 484 ரன்களும் எடுத்துள்ளார்.
மூன்று விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 9 சதங்களையும் குசல் விளாசியுள்ளார். 26 வயதான குசல் மெண்டீஸ்க்கும் நிஷல் என்ற பெண்ணிற்கும் நேற்று கொழும்புவில் திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தம்பதியின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
குசல் – நிஷல் தம்பதிக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் சமூகவலைதளத்தில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.