மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழந்து வருபவர் நடிகர் மம்மூட்டி. இவர் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் வரவேற்றார்.
பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பில் மம்மூட்டி கலந்து கொண்டார்.
இதன்போது, மம்மூட்டியை கூட்டிக்கொண்டு போக விமான நிலையம் வந்தவர் தாமதமாக வந்தது மட்டுமில்லாமல் மம்முட்டி யார் என்று தெரியாமல் கையில் பெயர் எழுதிய மட்டையுடன் விமான நிலையத்துக்குள் போக, மம்முட்டி அவரை கூப்பிட்டு நான் தான் மம்முட்டி என்று அறிமுகப்படுத்தி மாருதி 800 காரில் ஏறுகிறார்.
குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.