Malayagam
Home » கஷ்டமா இருக்கு… கேமரா முன் தேம்பி தேம்பி அழுத இலங்கை பெண்!

கஷ்டமா இருக்கு… கேமரா முன் தேம்பி தேம்பி அழுத இலங்கை பெண்!

இலங்கை பெண்

கேமரா முன் தேம்பி தேம்பி அழுத இலங்கை பெண்

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடத்துக்கொண்டு வருவதால் இதனால் ஏராளமான பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.

இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வந்தது. இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பொம்மை டாஸ்க் முடிவடைந்த நிலையில், வெற்றிபெற்ற மூன்று போட்டியாளர்கள் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை பெண்

இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இன்றைய தினம் பொம்மை டாஸ்க் முடிவுக்கு வந்த நிலையில், இந்த டாஸ்கில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளரை சக போட்டியாளர்கள் தெரிவு செய்தனர். இறுதியில், ஷிவின் மற்றும் அசீம் Worst Performer மற்றும் இந்த வாரம் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி பிக் பாஸ் சிறைக்கு அனுப்பினர்.

இதற்கு பின்னர் ஜனனி கேமரா முன் சென்று கஷ்டமாக இருப்பதாகவும், என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும், தனியாக இருப்பதுபோல் உணர்வதாகவும் இதனால் கஷ்டமாக இருப்பதாக கூறி அழுதுள்ளார்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed