கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள பளுகல் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
தற்போது, கொரோனா தொற்று மற்றும் அது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே, குறிப்பிட்ட இந்த அரசுப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் அதே வகுப்பறையில் படிக்கும் சக பள்ளி மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தல் பேரில் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.
இப்படி, கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்வது போன்று விளையாட்டாக எடுத்த டிக் டாக் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலாகி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக, அந்த 12 ஆம் வகுப்பு மாணவன், சக 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டும் போது, அங்கிருந்த சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி தங்களது வாழ்த்துக்களையும் கூறி உள்ளனர்.
இந்த தாலி கட்டும் காட்சிகளை எல்லாம், அவர்களுடன் உடன் இருந்த சக மாணவன் ஒருவன், தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனையடுத்து, விளையாட்டாக பள்ளி மாணவர்கள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த, அந்த பகுதி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது.
அத்துடன், இந்த கல்யாணம் தொடர்பான வீடியோவானது சம்மந்தபட்ட பள்ளி மாணவி மற்றும் மாணவனின் பெற்றோருக்கும் சென்ற நிலையில், இதனைப் பார்த்து அவர்கள் கடும் அச்சமடைந்தனர்.
மேலும், இந்த திருமணத்தால் கடும் பீதியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், பள்ளி மாணவ மாணவர்கள் திருமணம் செய்துகொண்ட வீடியோவானது. அந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்று உள்ளது.
இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.