Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நீங்க எல்லை மீறி போயிட்டீங்க! பாடகி சுசித்ரா கண்டனம்

சினிமா துறையினர் பற்றி சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை, ‘நீங்கள் எல்லை மீறி போயிட்டீங்க’ என்று பின்னணி பாடகி சுசித்திரா கண்டித்துள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சினிமா துறையில் பணி புரியும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைக் கருத்துகளைக் கூறி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது போன்ற பழைய கிசுகிசு பேச்சுகளுக்கு வழக்கம் போல பார்வையாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் பின்னணி பாடகி சுசித்ரா பற்றி கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ தொடர்பாக, பயில்வான் ரங்கநாதனை நேரடியாக தொடர்புகொண்ட சுசித்ரா ‘நீங்க எல்லை மீறி போயிட்டிங்க’ என்று கண்டித்துள்ளார்.

பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனிடம் போனில் பேசிய ஆடியோ ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் சுசித்ரா – பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது:

சுசித்ரா: ஹலோ மிஸ்டர் பயில்வான் ரங்கநாதன்களா?

பயில்வான் ரங்கநாதன்: ம்ம்…

சுசித்ரா: ஆங், எம்பேரு சுசித்ரா சார், நான் பின்னணி பாடகி. சார் உங்களுடைய யூடியூப்ல லேட்டஸ்ட் வீடியோ பார்த்தோம். அதில நீங்க என்ன வந்து பைத்தியம், டிரக் அடிக்ட் (போதை அடிமை), அப்புறம் யார் என்ன செக்சுவல் ஃபேவர்ஸ் கேட்டாலும் பண்ணுவேன்னு சொல்லியிருக்கீங்களே இதற்கு ஏதாவது எவிடென்ஸ் இருக்கா?

பயில்வான் ரங்கநாதன்: அப்படியெல்லாம் இல்லை…

சுசித்ரா: இல்லை சொல்லி இருக்கீங்க… அந்த வீடியோ உங்களுக்கு அனுப்புக்கிறோம். நீங்க அந்த மாதிரி சொல்றது, யாராவது சொல்லவச்சு சொல்றீங்களா? அல்லது உங்க கையில ஏதாவது ஆதாரம் இருக்கா?

பயில்வான் ரங்கநாதன்: அது இணையத்தில பேசுவதை வச்சுதான் தெரியும்… நீங்க சொல்லுங்க… உங்க கருத்தை சொல்லுங்க சொல்லிடறேன்.

சுசித்ரா: எனக்கு கருத்தே இல்லை… நீங்க என்னைப் பத்தி ஆபாசமா, அசிங்க அசிங்கமா பேசியிருக்கீங்க…

பயில்வான் ரங்கநாதன்: இல்லை இல்லை… அது வந்து அந்த சமயத்தில நீங்க டிரக் அடிக்ட் ஆகியிருந்தது பத்திரிகையில எல்லாம் வந்துச்சு…

சுசித்ரா: இல்லை இல்லை… நீங்க லேட்டஸ்ட் வீடியோ போட்டிருக்கீங்க… தனுஷ் வீடியோ சம்பந்தப்பட்ட வீடியோ, அதில மறுபடியும் குத்திக் கொலறி இருக்கீங்க… சுசித்ராவைப் பத்தின் ஃபர்ஸ்ட் 10 நிமிஷம் என்னைப் பத்தி பேசியிருக்கீங்க… உங்களுக்கு ஞாபகம் இல்லையா… சரி அந்த வீடியோவை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்… அதில நீங்க சுசித்ராங்கறவங்க முழு பைத்தியம், அவங்க வந்து டிரக் அடிக்ட் அவங்க வந்து ஹோட்டல்ல போய் கத்துகத்துணு கத்துவாங்க… கார்த்தி குமார் பாவம் அவர்தான் காப்பாத்தினாரு… (பயில்வான் ரங்கநாதன் குறுக்கிடுகிறார்) இருங்க ஒரு நிமிஷம் என்னை பேசவிடுங்க… கார்த்திக் குமார் பாவம் அவர்தான் என்னை காப்பாத்தினார். அவர்தான் அவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க… இருந்தாலும் அவங்க முழு பைத்தியமா ஆயிட்டாங்க… யார் என்ன கேட்டாலும் கொடுப்பாங்க… அப்படினு நீங்க ஒரு மாதிரி ஹிண்ட் பண்ணி எல்லாம் சொல்லியிருக்கீங்களே, அதற்கு உங்ககிட்ட ஏதாவது எவிடென்ஸ் இருக்கா…

பயில்வான் ரங்கநாதன்: இல்லை அப்படி சொல்லலை… நான் அவர் பேட்டி பத்திரிகைல வந்திருந்தது. அதைத்தான் நான் எடுத்து போட்டிருந்தேன்…

சுசித்ரா: இல்லை… சுசித்ராவைப் பத்தி டோட்டலில் உங்க ஓன் ஒப்பினியன் பத்திதான் சொல்லியிருக்கீங்க இல்லை…

பயில்வான் ரங்கநாதன்: இல்லை… இல்லை… என் ஒப்பினிய இல்லை… அவர் சொல்லியதைத்தான்… உங்க வீட்டுக்காரர் சொல்லியதைத்தான்… இந்த மாதிரி ட்ரீட்மென்ட் பண்ணேன்… கடைசியில என்னால சமாளிக்க முடியவில்லை. அதனால நான் டைவேஸ் பண்ணேன்… அப்படிணு அவர் சொன்னை நான் சொன்னேன்…

சுசித்ரா: அதை நீங்க அவருக்கு சாதகமாக சொல்லியிருக்கீங்க…. நீங்க என்ன டோட்டல் பைத்தியம்ணு நீங்களும் சொல்லிட்டீங்க…

பயில்வான் ரங்கநாதன்: இல்லை அவர் சொன்ன தகவலைத்தான் நான் சொன்னேன்…

சுசித்ரா: இல்லை உங்கள் தகவல்… உங்க யூடியூப் வீடியோ வை நான் உங்களுக்கே அனுப்புறேன்… முடிஞ்சா நீங்க வாட்ஸ் அப்லயே கொஞ்சம் ரெஸ்பாண்ட் பண்ணுங்க…. ஏன்னா… நீங்க ரொம்ப எல்லை மீறி போயிட்டிங்க…

பயில்வான் ரங்கநாதன்: இல்லை இல்லை நான் என்ன சொல்றேன்னா….

சுசித்ரா: இல்லை இல்லை நீங்க ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க… இந்த கால் ரெக்கார்ட் பண்ணப்படுகிறது. நீங்களும் ரெக்கார்ட் பண்றீங்க…. நானும் ரெக்கார்ட் பண்றேன்… நான் உங்களுக்கு வாட்ஸ் அப்ல வீடியோ அனுப்புறேன்… அதற்கு பதில் அனுப்புங்க….

இப்படி பாடகி சுசித்ரா நடிகர் பயில்வான் ரங்கநாதனு போனில் நேரடியாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.