சுரேகா வாணியின் மகள்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அசத்தியவர் தான் சுரேகா வாணி. கணவன் இறந்துவிட்ட நிலையில் இவர் தற்போது தனது மகள் சுப்ரிதா உடன் வசித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். இப்போது நடிகை லட்சுமி மன்சு, லச்சிண்டி மகிளா லோகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை கார்த்திக் அர்ஜுன் இயக்க ஷ்ரத்தா தாஸ், ஹேமா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் சுரேகா வாணியின் மகளான சுப்ரியா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இதனை எடுத்து அம்மாவும் மகளும் இணைந்து வெளியிடக்கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.