HomeசினிமாCinema Newsலோகேஷ் கனகராஜ் போட்ட சர்ப்ரைஸ் பிளான் லீக்கானது

லோகேஷ் கனகராஜ் போட்ட சர்ப்ரைஸ் பிளான் லீக்கானது

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருப்பார்கள்.

அதேபோல் தான் விக்ரம் படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம்.

- Advertisement -

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular