இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கிய பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் யாராலும் தோற்கடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு மழையின் காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு 141 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் ஓவர்கள் குறைக்கப்பட்ட பதற்றத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. இதனால் 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆபத்தாகும். இந்திய அணி கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும்.
ஒருவேளை தோற்றால், பாகிஸ்தான் அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வென்றால், இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே 6 புள்ளிகளுடன் இருக்கும். இதனால், நெட் ரன் ரேட்தான் யாருக்கு அரையிறுதி என்பதை உறுதி செய்யும்.
எனவே இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்றால், இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடனான போட்டியை கட்டாயம் வென்றே தீர வேண்டும். இரு அணிகளும் மோதும் இந்த போட்டி, வரும் அக்டோபர் 6ம் தேதியன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.