டி20 உலகக்கிண்ணம்: அரையிறுதியில் யார்? யார்?
டி20 உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 லீக் சுற்று போட்டிகள் மிகவும் பிரமாண்ட முறையில் முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2 வாரங்களாக படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் லீக் சுற்று போட்டிகள் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி போட்டியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
குரூப் ஏ
குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய 3 அணிகளுமே 5 போட்டிகளில் தலா 3 வெற்றிகளை பெற்று 7 புள்ளிகளுடன் இருந்தன.
ஆனால் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும் இங்கிலாந்து அணி 2வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
டி20 உலகக்கிண்ணம்
இலங்கையை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து!
குரூப் பி
குரூப் பி பிரிவை பொறுத்தவரை இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே முதலிடத்தை பிடித்து வைத்திருந்தது. 2வது இடத்திற்கு தென்னாப்பிரிக்கா வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வியடைந்து பாகிஸ்தானுக்கு வழிவிட்டது.
எனினும் இந்தியா – ஜிம்பாப்வே போட்டியின் முடிவை வைத்து தான் அரையிறுதியில் யார்? யார்? மோதவுள்ளனர் என்பது முடிவெடுக்கவிருந்தது. அதன்படி இந்தியா வென்றுள்ளதால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும், பாகிஸ்தான் அணி 2வது இடத்தையும் உறுதி செய்துள்ளன.
அரையிறுதி விவரங்கள்
அரையிறுதி சுற்றை பொறுத்தவரையில் குரூப் ஏ- வில் முதலிடத்தில் உள்ள அணியும், குரூப் பி -ல் 2வது இடத்தில் உள்ள அணியும் மோதும். அதே போல குரூப் ஏ 2வது இடத்தில் உள்ள அணியும், குரூப் பி முதலிடத்தில் உள்ள அணியும் மோதும். அந்தவகையில் இந்திய அணி – இங்கிலாந்து அணியையும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
பாலியல் புகாரில் இலங்கை வீரர் அதிரடி கைது… சிட்னி போலிஸார் நடவடிக்கை!
அரையிறுதி எப்போது?
அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி வரும் நவம்பர் 9ம் தேதியன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு காணலாம். இதே போல 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மோதவுள்ளது. இந்த போட்டி நவம்பர் 10ம் தேதி அடிலெய்டில் மோதுகிறது. மதியம் 1.30 மணிக்கு காணலாம்.