HomeசினிமாBiggBossபாலிவுட்டில் சமந்தாவை அறிமுகம் செய்யும் தனுஷ் ஹீரோயின்?

பாலிவுட்டில் சமந்தாவை அறிமுகம் செய்யும் தனுஷ் ஹீரோயின்?

காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகப் போவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

பாலிவுட் பட வாய்ப்புகள் வருவதால் மும்பையில் பங்களா வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சமந்தா. இந்நிலையில் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் சமந்தா பாலிவுட்டுக்கு செல்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் த்ரில்லர் படமாம். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சமந்தா தற்போது துபாயில் இருக்கிறார். அங்கிருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

அதில் ஒரு புகைப்படத்தில் சமந்தா வைத்திருந்த ஹேண்ட்பேக்கின் விலை அறிந்து ரசிகர்கள் வியந்தார்கள். அந்த ஹேண்ட்பேக்கின் விலை ரூ. 1.30 லட்சமாகும்.

கெரியரை பொறுத்தவரை இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சமந்தா. இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.

புதுப்பட வேலையை துவங்கும் முன்பு ரிலாக்ஸ் செய்ய துபாய்க்கு சென்றிருக்கிறார். அவருடன் ஸ்டைலிஸ்டான ப்ரீத்தம் ஜுகல்கரும் சென்றிருக்கிறார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular