அக்கட தேசத்தில் ஆவணக்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா படத்தின் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை ஒருவர்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து பிசியாக நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் அவர், சமீபத்தில் ப்ரைட் நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப்ரைட் நடிகர் படம் என்பதால்தான் படத்தில் ஒப்பந்தமானேன்.
ஆனால் இப்படி என்னை இயக்குனர் டார்ச்சர் செய்வார் என்று தெரிந்தால் நிச்சயம் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கமாட்டேன் என்று புலம்பி வருகிறாராம்.
பொதுவாக இந்த இயக்குனர் படத்தில் நடிக்கவே ஹீரோயின்கள் யோசிப்பார்கள். ஆனால் தெரியாமல் வந்து இந்த இளம் நடிகை சிக்கிக் கொண்டாராம்.
இப்போது என்ன செய்வது தெரியாமல் தவித்து வருகிறாராம். இதே நிலைதான் ப்ரைட் நடிகருக்கும் சமீபத்தில் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
அன்றிலிருந்து இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.