ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷ்ய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு தேடுப்பொறி செயலி என்றால் அது “கூகுள் சர்ச்” தான். இந்த நிலையில் ரஷியாவில் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை “கூகுள் சர்ச்” நீக்க தவறிவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டது. எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு நிர்வாக நடவடிக்கைகளை திறந்துள்ளது.
மேலும் கோர்ட்டும் வழக்கு தொடர்ந்து 65,670 டாலர்கள் அபராத தொகையாக விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.