HomeசினிமாBiggBossஇந்த முறை பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது?

இந்த முறை பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது?

அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது தொடங்கியது. இதில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது. அதோடு இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேரடி பார்வையாளர்கள் இடம்பெறுகிறார்கள். கடந்த முறை கொரோனா தொற்றால் இது தவிர்க்கப்பட்டது.

இந்த முறை பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற கமல் ஹாசன் வீட்டை சுற்றிக் காட்டினார்.

- Advertisement -

இந்த முறை வரவேற்பறை பிக் பாஸ் வீட்டில் இடம் பெற்றுள்ளது. தூக்கம் முக்கியம் என்பதற்கேற்றார் போல, மிகப்பெரிய படுக்கையறைகள், எல்லாம் டபுள் பெட் கட்டில்கள். பிக் பாஸ் வீட்டில் டைனிங் ஹால் இந்த முறை சற்று பெரிதாக்கப்பட்டுள்ளது. இந்த முறை வீட்டில் உள்ள பொருட்கள் முதல் டெகரேஷன் வரை பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளன.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தண்டனை சிறை தான். ஆனால் இந்த முறை சிறை கிடையாது. அதற்கு பதில் பாதாள சிறை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular