Save 20% off! Join our newsletter and get 20% off right away!

Thalapathy 66: ‘தளபதி 66’-ன் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் விஜய் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் ’தளபதி 66’ திரைப் படப்பிடிப்பின் முதல்கட்டம் நிறைவடைந்ததாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் பெயரிடப்படாத ‘தளபதி 66’. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா, மற்றும் சரத்குமார் உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிவித்ததோடு சேர்த்து ஒரு போஸ்டர் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளது, படக்குழு. அதில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2023 பொங்கல் அன்று வெளிவரவுள்ள இப்படத்தின் அப்டேட்டை பெரிதும் எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த குறித்தான செய்தியை ஷேர் செய்தும், ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.