பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் நான்காவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் கிராமம், நகரம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
நகர அணிக்கு நிரூப் தலைவராகவும், கிராம அணிக்கு அக்ஷரா தலைவராக இருந்து வருகிறார். இதில் அடுத்தடுத்து கொடுக்கப்படும் டாஸ்களில் பிக்பாஸ் கொடுக்கும் பணங்களை வென்று, இறுதியில் அதிக தொகையை வைத்திருக்கும் அணியே வெற்றி பெற்றது என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இந்த வாரம் நெருப்பு ஆற்றலுக்கான வாரம் என்பதால், நெருப்பு காயினை சொந்தமாக்கி இருக்கும் இசைவாணி, இந்த டாஸ்க்குகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.
நேற்று ஜாலியாக போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் நிகழ்ச்சியின் 25 வது நாளான இன்று, இசைவாணி தலைமையில் கிராமத்தார், நகரத்தார் இடையே விவாதம் நடைபெற்றது. பட்டிக்காடா, பட்டணமா என பெயரிடப்பட்ட இந்த விவாதத்தில் முதல் தலைப்பாக, பூர்வீகத்தை மறந்தவர்கள் பற்றி பேச டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கின் போது நகரத்தார் சார்பில் பேசிய சிபி, தாமரையை பார்த்து, நீங்கள் கிராமத்தில் இருந்து தான் வந்துள்ளீர்கள். நீங்க என்ன அடக்கமாக உள்ளீர்களா என கேட்டார்.
இதனால் டென்ஷன் ஆன தாமரை, என்ன அடக்கமாக இல்லாமல் இருக்கிறேன் என்றார். அதற்கு மற்ற ஹவுஸ்மெட்கள், இது விவாத நிகழ்ச்சி அவர் பேசி முடித்ததும் தான் நீங்கள் பேச வேண்டும் என தாமரையை அமர வைத்து விட்டனர்.
சிறிது நேர விவாதத்திற்கு பிறகு, பட்டிக்காடா பட்டணமா விவாத டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கு பிறகு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிபியிடம் சென்ற தாமரை, நான் என்ன தம்பி அடக்கமாக இல்லாமல் இருக்கிறேன் என கேட்டார். அதற்கு சிபி, அடக்கம் என்றால் என்ன என்று பதில் கேள்வி கேட்டார்.
இதற்கு விளக்கம் தந்த தாமரை, அடக்கம் என்றால் கையடக்கம், வாயடக்கம் என்றார். அதற்கு விடாமல் சிபி, அவை எல்லாம் உங்களிடம் உண்டா என்றார். தாமரையும் ஆமாம் உண்டு என்றார்.
இருக்குன்னா ஓகே என்றார் சிபி. தாமரை விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, அப்போது குறுக்கிட்ட அபினய், தாமரை, சிபி முதலில் சாப்பிடட்டும் பிறகு பேசுங்கள் என்கிறார். அக்ஷராவும், தாமரையை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.
தாமரை அங்கிருந்து சிறிது நகர்ந்ததும், நான் கேட்டது இவங்களுக்கு உள்ளுக்குள் சுட்டுவிட்டது போல என அக்ஷராவிடம் சொல்கிறார் சிபி. இவர்கள் இருவருக்கும் இடையே எப்போது, என்ன பிரச்சனை நடந்தது என புரியாமல் மற்ற ஹவுஸ்மெட்களும், ரசிகர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.