பிக்பாஸ் சீசன் 5 ன் 48 வது நாளான இன்று, இந்த வாரம் நடைபெற்ற கண்ணாடி டாஸ்க் பற்றி கமல் பேசினார்.
அப்போது பிரியங்காவின் கேப்டன்சியை பாராட்டி பேச்சை துவக்கிய கமல், கேமை சுவாரஸ்யமாக விளையாடுங்கள். விதிகள் உங்களுக்கு புரியவில்லை. ஏன் டாஸ்கில் பாசத்தை பொழிகிறீர்கள் என்றார்.
ஆனால் கமல் பேசுவது புரியாததை போல் ஒரு ரியாக்ஷன் காட்டியபடி, திருதிருவென விழித்தபடி நின்றார் பிரியங்கா. விறுவிறுப்பான காமெடி சீன் நடிக்க சொன்னா, பாசமலர் சீன் நடிக்கிறீர்கள் என்றார். நிரூப், தாமரை சரியாக விளையாடினார்கள் என பாராட்டினார் கமல்.
அபிஷேக் ராஜாவின் வருகை.. இமான் அண்ணாச்சியின் ரியாக்ஷன் இதுதான்.. குறும்பு படம் போட்ட கமல்!அபிஷேக் ராஜாவின் வருகை.. இமான் அண்ணாச்சியின் ரியாக்ஷன் இதுதான்.. குறும்பு படம் போட்ட கமல்!
கமல் பாராட்டியதால் குஷியான தாமரை, இந்த புள்ள இடத்துல நான் இருந்தால் வேறு மாதிரி பேசி இருப்பேன் என்றார். உடனே கமலும், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்.
நடித்து காட்டுங்கள் தாமரை என்றார். உடனே தயங்கிய தாமரை, இப்போது பாயிண்ட் ஏதும் ஞாபகத்திற்க வரவில்லை. சிறிது நேரம் கழித்து நடித்து காட்டுவதாக கூறினார். இதனால் கமலும் பிரேக் விட்டு சென்றார்.
பிரேக்கிற்கு பிறகு, பிரியங்காவின் கண்ணாடியாக மாறி பேசிய தாமரை, உன்னிடம் பாசமாக பேசுவதாக சிலர் நடிக்கிறார்கள். நீ உண்மையாக பாசம் வைத்து பழகுகிறவர்கள் எல்லோரும் உன்னிடம் உண்மையான பாசத்துடன் இல்லை. பெண்கள் எல்லாவற்றிலும் விளையாட்டாக இருக்கக் கூடாது. ஆனால் தாமரை உனக்காக உயிரைக் கூட கொடுப்பாள் என்கிறார்.
மிக சுவாரஸ்யமாக, நிரூப்பை பற்றி பிரியங்காவிடம் மறைமுகமாக கூறி வந்தார் தாமரை. தாமரை பேசும் போது நிரூப்பை க்ளோசப் ஷாட்டில் காட்டினார்கள். எதையோ சொல்லிக் கொண்டிருந்த தாமரை திடீரென கமலை பார்த்து, சார்…நீங்க இருப்பதால் பதற்றமாக உள்ளது. எல்லாம் மறந்து விட்டது சார் என்கிறார்.
ஆனால் கமலோ விடாமல், பிரியங்காவை தாமரையின் கண்ணாடியாக மாறி பேச வைக்கிறார். இடைவிடாமல் பிரியங்கா பேசியும், இப்போதும் பாசத்தை தான் காட்டுகிறீர்கள் என்றீர்கள் கமல்.
கமல் சென்ற பிறகு, தான் பேசியதற்காக விளக்கம் கொடுக்கிறார் தாமரை. நான் இப்படி பேசியதால் என்னை தவறாக நினைக்காதே. இந்த பேட்ஜை கழற்றிக் கொடுத்தால் நீ வாழ்வாய் என்றால் நான் அதை கண்டிப்பாக செய்வேன். அது தான் என்னுடைய கேரக்டர். ஆனால் என்னை பற்றி யார் என்ன கூறினாலும் அதை நம்பாதே என்கிறார்.
மேலும், நீ யாரிடமாவது சென்று பேசினால் அவர்கள் உன்னிடம் பேசுவதை நீ கவனிக்கிறாரா என எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் நிறைய கவனிக்கிறேன்.
என்ன இவர் இப்படி பேசுகிறாரே என நினைப்பேன். யாரையும் நம்பி விழுந்து விடாதே என எச்சரிக்கிறார். அபிஷேக்கும் பிரியங்காவை தனியே அழைத்துச் சென்று நிரூப் நடந்து கொள்ளும் விதம் பற்றி விளக்குகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள், அப்பாவி என பெயர் வாங்கிய தாமரையே இவ்வளவு விவரமாக எச்சரிக்கிறார். இன்னமுமா பிரியங்காவிற்கு நிரூப் பற்றி புரியவில்லை.
இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே என கலாய்த்துள்ளனர். ஒருவேளை இந்த சீசனோட அர்ச்சனா ஆக முயற்சி செய்கிறாரா பிரியங்கா என பலர் கிண்டலாக கேட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.